5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!!
5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று(நவம்பர்7) மிகவும் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கிய நடைபெற்று வருகின்றது.
சத்தீஸ்கர், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(நவம்பர்7) சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
சமீபத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது. இதையடுத்து இன்று(நவம்பர்7) காலை 7 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 மாநிலங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நடைபெற்று வருகின்றது.
அதே போல மிசோரம் மாநிலத்தில் இன்று(நவம்பர்7) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மிகவும் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
சத்தீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் மாலை 3 மணி வரை 10 தொகுதிகளிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.