பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

0
44
#image_title

பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது “வா வரலாம் வா” என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எல்.ஜி. ரவிசந்தர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா தயாரித்துள்ளது.

இப்படத்தில் பாலாஜி முருகதாஸ்க்கு ஜோடியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். இவர் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர்களை தவிர்த்து ‘மைம்’ கோபி, ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரெமா, தீபா, போண்டா மணி, சிங்கம் புலி, சரவண சுப்பையா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

40 குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்து இருக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவாளராகவும், தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டராக பணியாற்றி இருக்கிறார்.

‘வா வரலாம் வா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 11 அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி வருகின்ற டிசம்பர் 01 அன்று “வா வரலாம் வா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி,எஸ் கிரியேட்டிவ் மீடியா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.