ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

Photo of author

By Divya

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

Divya

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.அப்பொழுது முதல்வர் மற்றும் அமைச்சர் பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.1.72 கோடி மதிப்பில் சொத்து குவித்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம்,அவரது மனைவி,மகன்கள்,மகள் சகோதரிகள் ஆகியோர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு மனுவை ஏற்று வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவித்தது.

இந்நிலையில் சிவகங்கை நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி இந்த வழக்கு இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளில் இருந்து தமிழக அமைச்சர்கள் பொன்முடி,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து வேலூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்குகளை விசாரித்து அதிரடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.