சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

0
244
#image_title

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது.

முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 28 அன்று போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தாமனாக முன்வந்து இந்த வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.

கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் பணியிட மாற்றம் செய்யபட்டார். அதன் பின் இந்த வழக்கை இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க தொடங்கினார்.

இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு வேலூர் முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதை உறுதி செய்துள்ள நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் வருகின்ற டிசம்பர் 21 அன்று இதற்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.

அதுமட்டும் இன்றி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி வருகின்ற டிசம்பர் 21 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு சிறை தண்டனை உறுதியானால் தற்பொழுது அவர் வகித்து வரும் அமைச்சர் பதவி பறிக்கப்படும். அதுமட்டும் இன்றி சிரைத்தண்டை 2 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டால் அவரால் ஆறு வருடங்கள் வரை தேர்தலில் நிற்க முடியாமல் போகும்.

பணமோசடி வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி அவர்கள் சிறை வாசம் அனுபவித்து வரும் நிலையில் தற்பொழுது சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருப்பது திமுகவை கதிகலங்க செய்திருக்கிறது.