28-7-2022- இன்றைய ராசிபலன்!

0
69

மேஷம்

இன்று தங்களுடைய கோரிக்கைகள் யாவும் நிறைவேறும் நாள், குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் நீங்கும், வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவார்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பொழுது விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும், அரசு பணியில் அணுகுலம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும், நண்பர்கள் சரியான சமயத்தில் கை கொடுத்து உதவி புரிவார்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள், புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பார்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், தொழில் வளர்ச்சி அதிகரிக்க முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும்.

சிம்மம்

இன்று தங்களுடைய எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நாள், நேற்றைய பணி ஒன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு வந்து சேரும், உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

கன்னி

இன்று தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நாள், நினைத்த காரியத்தை நினைத்த சமயத்தில் செய்து முடிப்பீர்கள், உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள், குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் தொலைபேசி மூலமாக வந்து சேரலாம், உத்தியோகத்தில் எதிர்பாராத ஊதிய உயர்வு கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள், ஓய்வெடுக்க முடியாத வேலைகள் வரும், உணவில் கட்டுப்பாடு தேவை, உபயோகத்தில் அருகில் இருப்பவர்களிடம் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் நன்று.

மகரம்

இன்று தாங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள், பெற்றோர்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள், வீடு வாகன பராமரிப்பதற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள், வரவு திருப்த்திகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு கவலைகள் யாவும் நீங்கும் நாள், பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும், ஆதரவு காரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், உத்தியோகத்தில் உங்களுடைய செயல்பாடு மற்றவர்களின் மனதை கவரும்.

மீனம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், சுபசெய்தியொன்று சுற்றத்தார் மூலமாக வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், வாரிசுகளின் கல்வி தொடர்பாக எடுத்த முயற்சி கைகூடும்.