பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சனையா? அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள்!

0
65

ஒருவருக்கு தாய், தந்தை மற்றும் தாய் ,தந்தை, வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்து தான் பூர்வீக சொத்து எனப்படும். ஜனன கால ஜாதகத்தில் 5 மற்றும் 9ம் இடத்து செவ்வாய் சுபவ வலிமை பெற்றதுடன் குரு, சனி, உள்ளிட்டவற்றின் சம்பந்தம் இருப்பவர்கள் வம்சா வழியாக பூர்வீக சொத்தை பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்கள்.

பூர்வீக சொத்துக்கள் அதிகமாக இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்த பிறகு பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகி விடும். ஜனநாயக கால ஜாதகத்தில் 5ம் அதிபதி ஆறில் இருந்தால் பூர்வீக சொத்தை கடனுக்காக இழக்க நேரிடலாம். 5ம் அதிபதி எட்டில் இருந்தால் பூர்வீக சொத்தால் அங்காளி, பங்காளி, வம்பு, வழக்கு, அவமானம், உள்ளிட்டவை ஏற்படும். 8ம் இடத்திற்கு சுப கிரக சம்பந்தம் இருப்பவர்கள் வழக்கில் வெற்றி காணலாம்.

ஆனாலும் கூட பல வருடங்களாக வழக்கு நடத்தி சொத்தின் மதிப்பிற்கு மேல் பணம் செலவு செய்ய நேரிடலாம். 5ம் அதிபதி 12ல் இருந்தால் பூர்வீக சொத்தை இழந்து பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரிடும்.

5ம் அதிபதி அல்லது 5ம் இடத்தில் நீசம், அஸ்தமனம், வக்கிர கிரகங்கள் நிற்பது திதி சூனியத்தால் பாதிப்பு, லக்னத்தில் சூரியன், ஒன்பதில் சூரியன், சனி, சனி, ராகு கூட்டணி அல்லது ராகு, கேது கூட்டணி அல்லது 9ம் இடத்துடன் தொடர்பு பெறும் சூரியன், சனி, ராகு, கேதுக்கள், சூரியன், சந்திரன், ராகு, கேது, சனி, உள்ளிட்டவை போன்ற கிரகச் சேர்க்கைகள் இருந்தால் பயன்களை விட துன்பமே அதிகரிக்கும்.

மேலே தெரிவித்த அமைப்பை பெற்றவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது பூர்வீக சொத்தில் வசிக்க கூடாது. 5 மற்றும் 9ம் இடத்தில் ராகு, கேது, சம்பந்தம் பெற்றால் தொடர்ந்து துர்க்கை அல்லது காளியை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பூர்வீக சொத்தால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நலம் பெறலாம்.

சொத்துக்களை இழந்தவர்களும், ஏமாற்றி பிடுங்கப்பட்டோரும், வரவேண்டிய நியாயமான பூர்வீக சொத்துக்கள் வராமல் தவிப்போரும், இழந்த செல்வம், புகழ், கௌரவம், உள்ளிட்ட அனைத்தையும் திரும்ப பெற வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் வெண் அகலில் கரு நீல நிற துணியில் சிறிது வெண் கடுகை முடிந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறலாம்.