கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

Photo of author

By Parthipan K

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

Parthipan K

Updated on:

நம் தமிழ் திரையுலகத்தில் இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிலும் சென்று வெற்றிப் படங்களையும் கருத்துள்ள நுணுக்கமான படங்களையும் தந்துள்ளார்.
அதோடு இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.

இந்நிலையில் தமிழில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. அப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனுஷ் அவர்கள் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது.                     

பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை களத்தில் உருவாகியிருந்தது. எனவே அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. இந்த படத்திற்காக இயக்குனர் பிரதீப் பல பாராட்டுகளை குவித்து இருந்த நிலையில் நடிகர் தனுஷ் அவரை அழைத்து தனக்குத் தகுந்த கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். எனவே அவர்கள் விரைவில் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் இதுபற்றி எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.            

மேற்குறிப்பிட்ட படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் சார்ந்த ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.