கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார்.
“வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் 1995ல் வெளியான “அசுரன்” போன்ற திரைப்படத்தை இயக்கியவர் வேலுபிரபாகரன்.
கருப்பர் கூட்டத்தை தொடர்ந்து, இவரும் கந்தனையும், கந்தசஷ்டி தொடர்பான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியுள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட சுரேந்திரன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஆதரித்து பேசியுள்ளார் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன்.
இந்த நிலையில் இந்துக்களையும், அவர்களின் புனிதமான கந்தனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறு பரப்பியவர்களை ஆதரித்துள்ளார்.
அதனடிப்படையில் இந்து முன்னணியினர் கொடுத்த புகாரில்,
“இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாரையும் விட மாட்டோம், மேலும் இந்துக்களின் புராணங்கள் குறித்தும், இந்துமதக் கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசிய வேலு பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இதனடிப்படையில், பொது அமைதியை குலைக்கும் வகையிலும், சமூகத்தில் வன்முறையைத் தூண்டுவதாக பேசிய முறையிலும், சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியதன் அடிப்படையிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலுபிரபாகரனை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தனர்.