குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

0
342
#image_title

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை, ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதும் நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் தான் இருக்கின்றது. இந்த வருட முடிவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் இப்பொழுதே அதை வாங்கி வைக்க மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதுகின்றது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640 என்று விற்பனையானது. இந்நிலையில் இன்று அதன் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.5,830க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.46,560க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.5,820க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.50,792க்கும் விற்பனையாகின்றது.

அதேசமயம், வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.78க்கும், ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபோஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!
Next articleபடத்தின் கதையை 2 வரியில் முடித்த கண்ணதாசன் !கண்ணீர் விட்ட பாலச்சந்தர்!