தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

0
320
#image_title

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது.

தற்பொழுது சோதனை முறையாக புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் , இவ்வாறு செய்வது மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்க செய்யும் என கூறுகின்றனர் ஆராய்ச்சயாளர்கள்.

புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘Open book’ தேர்வு முறையை கொண்டு வர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

வரும் கல்வியாண்டில் சோதனை முயற்ச்சியாக, நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Previous articleஅஜீரணக் கோளாறுகளால் அவதியா? அதற்கு பயன் தரும் சூப்பரான மருந்து இதோ!
Next articleஅவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!