16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா.. – மனம் திறந்த ராஜ்கிரண்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரண். இவருடைய தனித்துவமான சண்டைக்காட்சி, மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். ராமநாதபுரத்தில் பிறந்த இவருக்கு சின்ன வயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடியவர். நன்றாக படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது.
ஆனால், வீட்டு சூழல் காரணமாக 16 வயசுலயே வேலை தேடி சென்னைக்கு வந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே உட்பட பல படங்களில் நடித்தார். நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி, சேவல், முனி போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில்,
நான் ராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்தேன். என்னை 15 வயது வரை என் அம்மா என்னை பணக்கார பிள்ளை போல வளர்த்தார். ஆனால், எனக்கே தெரியாது 16 வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு வருவேன் என்று. ஆனால், இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது ஊரை விட்டு வந்த நிறைய பேர் சாப்பாடுக்கே வழியில்லாமல் பட்டினி கிடப்பதை பார்த்திருக்கிறேன். என் நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோருக்கும் நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைத்தான் கொடுப்பேன் என்றார்.