அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

0
154

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

 

 

அரியலூர் அருகே உள்ள ஆரநூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பரமசிவம். இவர் ஒரு விவசாயி ஆவார். நேற்று அரியலூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். இதற்கு பணம் எடுக்க தெரியாததால் தனியாக நின்று உள்ளார். அப்போது அவருக்கு அருகில் நின்ற வாலிபர் ஒருவர் உதவியுள்ளார். போது ஏடிஎம் இன் ரகசிய நம்பரை கேட்டு பணம் எடுக்க முயற்சி செய்தார். பிறகு வங்கி ஏடிஎம்மில் பணம் இல்லை என்று அந்த விவசாய இடம் கூறியுள்ளார். பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று அந்த ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவரை துரத்தி மடக்கி பிடித்தனர்.

பிறகு சம்திங் இன்ஸ்பெக்டர் பாலாஜி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது விசாரணையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி வெள்ளூரணி தெருவை சேர்ந்த முகமது ஓயிஸ். இவருடைய வயது 36 என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்த போது அவர் குடும்பத்துடன் சென்னையில் வசிப்பதாகவும் ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று ஏடிஎம் மையத்தில் இன்று பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரை மற்றும் மூதாட்டியிடம் பணத்தை சுலபமாக திருடி வருவது தெரிய வந்தது. வாக்குமூலம் அடித்த அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?
Next articleதாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!