சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள்.
சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் என் மனைவி 2022 ம் ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். இந்நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக கேட்ட போது தன்னுடைய தோழியின் ஆண் நண்பர்கள் தன்னை அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக பகீர் தகவல் வெளியாகியது. இது தொடர்பாக சிந்தாதிரிபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் பின் அவர் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு அடிக்கடி கால் செய்யும் எங்களை வைத்து பார்த்த போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சரி பேட்டை சுரேஷ் என்ற 20 வயது மாணவன் சிக்கினான்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் நண்பர்களான ரோஷன் மணி,பாண்டி, சீனு ஆகியோரும் மாணவிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இந்த தொடர்புக்கு உடனிருந்த பெண் தோழி தான் காரணம் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 8 பள்ளி மாணவர்களும் 1 கல்லூரி மாணவர் உள்பட 9 மாணவர்கள் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதில் சுரேஷ் அந்த பெண்ணின் தோழியிடம் முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். ஒரு முறை நேரில் பார்க்க சென்றுள்ளார் அதன் பின் அந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை அறிமுகம் செய்ய சொல்லி அறிமுகமாகி இருக்கிறார். பின் காதல் வலை வீசி ஹோட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சக நண்பர்களுடன் பழக வைத்து அனைவரும் அதே வேலையை செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை அனைவரையும் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.