போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

Photo of author

By Rupa

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்ட பகுதியில் உள்ள கால்வாய் வாசன் பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருக்கு வயது 32. இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

கணவன் மனைவி இருவருக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இக்காரணத்தினால் பிரபு வீட்டின் ஒரு அறையில்  தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று இரவு காலமானார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் உள்ள அறையில் வைத்திருந்தது.பிரேத பரிசோதனை பாதுகாப்பு ஊழியர் சாப்பிடுவதற்காக அறையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விருப்பம் இல்லாத உறவினர்கள் பிரபுவின் உடலை கடத்த முயற்சித்துள்ளனர்.மேலும் பிரபுவின் போதை ஆசாமி உறவினர்கள் அறையின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.பிறகு பிரபுவின் உடலை எடுக்க முயர்சித்துள்ளனர்.இதையறிந்த போலீசார் அங்கு வந்து அந்த போதை ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.