படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

0
119

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

டோவினோ தாமஸ் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ். இவர் நடித்த கல மற்றும் மின்னல் முரளி ஆகிய சமீபத்தைய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. அதையடுத்து தற்போது அவர் வாஷி திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டோவினோ தாமஸ் 2493 எஃப் டி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்த சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இந்த தாக்குதலில் படத்தின் மேக்கப் மேன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தப்பியோடிய அந்த நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர். இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் நடந்திருப்பது கேரளாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் தாக்குதல் நடத்தியவர்கள் யார் அவர்கள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.