சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல்

Photo of author

By Anand

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல்

Anand

Attack on mother who went to report molestation of law student

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல்

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சரண்யா (21) என்பவரை சில வாலிபர்கள் கிண்டல் செய்ததால் புகார் அளித்த அவரது பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மாணவியை கேலி, கிண்டல் செய்ததால் இது குறித்து ஊர் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காரணம் கேட்ட சட்டக்கல்லூரி மாணவி மற்றும் மாணவியின் தாயார் குமுதாவை நெஞ்சின் மீது எட்டி உதைத்ததால் கம்மாளப்பட்டி ஊர் மக்கள் தடுக்க முயற்சித்த போது அனைவரையும் துரத்தி துரத்தி அடித்துள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து போன கம்மாளப்பட்டி கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பத்துக்கு மேற்பட்டோர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.