11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் குறித்து நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.அந்தவகையில் அகமதிப்பீட்டுக்கு மொத்தம் 10 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.
அதனை வருகை பதிவுக்கு அதிகபட்சமாக இரண்டு மதிப்பெண்களுக்கு, உள்நிலைத் தேர்வுகளுக்கு அதிகபட்சமாக நான்கு மதிப்பெண்களும்,செயல் திட்டம்,களபயணம் ஆகியவற்றுக்கு இரண்டு மதிப்பெண்களும்,கல்வி இணை செயல்பாடுகளுக்கு இரண்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண் வழங்கும் போது ஆசிரியர்கள் நடுநிலையுடன் தான் செயல்படவேண்டும் அனைத்து தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சரியான முறையில் தான் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவதை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அகமதிப்பீட்டுக்கு அதிகபட்சம் 25 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளனர்.இதற்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்களும் ,உள்நிலைத் தேர்வுகளுக்கு 10 மதிப்பெண்களும் ,செயல்திட்டம் ,களப்பயணத்துக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு 5 பதிப்பெண்களும் வழங்கப்படும்.