6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Photo of author

By Parthipan K

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Parthipan K

Updated on:

Attention 6th to 12th class students!! Department of School Education released a new notification!!

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.

அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.

தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.

மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல விடுமுறைகள் விடப்படுவதால் மாணவர்களின் வகுப்புகளை முறையாக தொடர முடியவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் நடத்த வேண்டிய வகுப்புகள் நிறைய உள்ளதால் இனி  சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் இன்று முதல் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் சனிக்கிழமைகளிலும் தொடரும் என்று பள்ளிகல்வித்துறை  அறிவித்துள்ளது.எனவே 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவூர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் திங்கட்கிழமை நாள் செயல்பட வேண்டிய கால அட்டவணை படி பின்பற்றி இயங்கும் என்றும்பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.