9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!
கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.
அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.
தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.
மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல விடுமுறைகள் விடப்படுவதால் மாணவர்களின் வகுப்புகளை முறையாக தொடர முடியவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் நடத்த வேண்டிய வகுப்புகள் நிறைய உள்ளதால் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்ற தமிழக அரசு தற்பொழுது வளரிளம் பருவத்தின் பெருந்தொற்று ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்ற மாணவர்களுக்கு அவரிகளின் மன உறுதி ஏற்படுத்தும் வகையில் சில பயிற்ச்சி வகுப்புகளை நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை விதைக்கும் வகையிலும் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் சில மனநலம் சார்த்த வகுப்புகளை நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பின்தங்கிய 44 கல்வியியல் வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த மனநலம் சார்த்த வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.