அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…

0
74

அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…

 

அடிக்கடி அல்லது தினமும் லிப்லாக் கிஸ்  அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

 

முத்தம் என்பது அன்பை மாறிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கை, நெற்றி, கண்ணங்கள் ஆகிய பகுதியில் முத்தம் கொடுப்போம். நமக்கு நெருக்கமான அதே சமயம் நமக்கு வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாக உதட்டில் முத்தம் கொடுப்போம். அவ்வாறு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் பல நன்மைகள் இதன்மூலம் கிடைக்கின்றது.

 

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்…

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படைகின்றது. அதாவது சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியிடுவோம். அதுவே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த பின்பு ஒரு நிமிடத்திற்கு 60 முறை மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடுவோம். நாம் அதிகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகின்றது.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படைகின்றது.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் பொழுது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் மாறுகின்றது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் பொழுது அதிகம் உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் ஆபத்தான கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் மன அழுத்தம் குறைகின்றது.

 

* தொடர்ந்து ஒரு நிமிடம் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் உடலில் 26 கலோரிகள் குறைகின்றது.

 

* தினமும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் பல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகின்றது.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் பொழுது உடலில் கொலஸ்ட்ரால் குறைகின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

 

* உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் உங்களின் அலர்ஜி அறிகுறிகள் குறைகின்றது.