விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனையடுத்து போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது ,ஆன்லைனில் தான் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி உள்ளனர்.
கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையிலும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதும் மற்றும் பயணத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதும்.சுய அறிவிப்பு படிவமான ஏர் சுவிதா தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அந்த படிவத்தில் நிரப்பும் அனைத்தையும் ஆவணமாக வைத்திருக்க வேண்டும் என்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏர் சுவிதா நடைமுறை தேவையில்லை என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.ஆனால் இவை மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.