தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு!
தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் கடந்த 2020 மற்றும் 21 ஆகிய இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் இருந்து வந்ததால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டது.
மேலும் தற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் வருடத்தின் தொடக்கத்திலும் தற்காலிக தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுகாண பட்டியலை சில மாற்றங்களை செய்து தற்போது அப்டேட் செய்துள்ளது.
அதனை tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏழாம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை பொதுப்பணி, ஊராட்சி நகர அமைப்பு போன்ற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது.
மேலும் இதற்கு மொத்தம் 173 பணியிடங்களுக்கான இந்த தேர்வு இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுகளை கணினி வழி மூலமாகவே தேர்வு நடத்த இருக்கின்றது.