நீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

Photo of author

By Sakthi

நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் வீக்கம் பணியின் திறமை ஆகியவற்றை அதிகப்படுத்தும் என ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நோய் தொற்று இருப்பதால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வரும் சூழலில் நாடு இருந்து வருகிறது. அலுவலக வேலை என்று சொல்லி நாள் முழுவதும் கணினியை பயன்படுத்தி விட்டு, அதன்பின் தொலைக்காட்சியை பார்ப்பது, கைப்பேசியில் உரையாடுவது மற்றும் இணையதள விளையாட்டுகள் ஆகியவற்றை விளையாடுவது, என்று நம்முடைய கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு சிலர் வீட்டிலேயே இருக்கும் நிலை இருப்பதால், இரவில் தூக்கம் இல்லாமல் கண் விழித்துக் கொண்டே இருப்பது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாள் முழுதும் வேலை செய்யும் நபர்களின் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவரவருடைய ஒரு நாள் வேலையை சரியாக செய்வதற்கு நம்முடைய உடல்நலத்தை பாதுகாப்பது அவசியமாகும்.

டிவி மற்றும் கைபேசி போன்றவற்றின் பயன்பாடுகளால் நாம் பல நேரங்களில் தூக்கத்தை இழந்து இருக்கிறோம் ஆகவே நம்மில் பலருக்கு இந்த ஆய்வு ஒரு நல்ல அறிவுரையை வழங்குகின்றது. உறங்குவதற்கு முன்பாக சிறிது நேரம் நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை அணிவதால், இரவில் உறக்கம் நன்றாக வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது, இதன் மூலம் அடுத்தநாள் வேலைகளை நாம் சுறுசுறுப்பாக செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக நாம் அனைவரும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் கணினிகள் மற்றும் தொடுதிரை கைபேசிகள் போன்றவை நீல ஒளியை வெளியிடுவதாகவும், அவை நாம் கண்களுக்குள் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றது ஆகவே நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை நாம் அணியும்போது கணினிகள் வெளியிடும் நீல ஒளி நம் கண்களுக்குள் செல்வது தடைபடும். இதன் காரணமாக கண்கள் பாதுகாக்கப்படும்.

ஆகவே, கணினி உள்ளிட்ட பொருட்களில் இருந்து வெளிவரும் நீலஒளி தடுக்கப்படும் காரணத்தால், கண்கள் எளிதில் தூக்கத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும், அந்த ஆய்வில் கூறப்படுகிறது. இண்டியானா யுனிவர்சிட்டி கெல்லி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஆகிய கிறிஸ்டியானோ எல்.குரானா இதுபற்றி தெரிவித்தபோது, நீல ஒளி பில்டர் கண்ணாடிகளை அணிந்து கொள்வது தூக்கம் மற்றும் வேலையில் ஈடுபாடு பணியில் செயல்திறன், மற்றும் நிறுவனத்தில் நடத்தை ஆகியவையை மேம்படுத்துகிறது. என்பது இந்த ஆய்வு மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இந்த கண்ணாடிகள் உடல் ரீதியாக இருளான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் காரணத்தால், தூக்கத்தின் அளவு அதிகமாகிறது. அதாவது அதிக நேரம் ஆழ்ந்த நித்திரையில் இருக்க உதவுகிறது என்கிறார்.
இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அப்ளைடு சைக்காலஜி ஆன்லைன் என்கின்ற ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் 63 நிறுவன மேலாளர்கள் அதுமட்டுமின்றி 67 கால் சென்டர் ஊழியர்களிடமிருந்து தரவுகளை சேமித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை பயன்படுத்தும் நபர்களின் வேலை, மற்றும் செயல்திறன், ஆகியவை மேம்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.