வீட்டில் யாரும் இல்லை ! அதனால் தான் குளிப்பதை போட்டோ எடுத்தேன்! சிலிண்டர் போட வந்த நபர்!

0
200

கோவை மாவட்டத்தில் வீட்டிற்கு சிலிண்டர் போட வந்த நபர் குளியலறையில் பெண் குளிப்பதை போட்டோ எடுக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கோவையில் உள்ள பொண்ணையராஜபுரம் பகுதியில் நடந்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் தன்னை படம் பிடிப்பதை உணர்ந்து கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். வெளியே வந்து அவசரமாக பார்க்கும் பொழுது சிலிண்டர் போட வந்த நபர் அவசர அவசரமாக வண்டியில் ஏறிச் செல்வதை அந்தப் பெண் பார்த்துள்ளார்.

அந்தப் பெண் நடந்ததை தனது கணவனிடம் கூற, அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ய அந்த நபர் சிலிண்டர் போட வந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது.

அப்பொழுது செல்வராஜ் வீட்டில் “யாரும் இல்லாததால் குளிப்பதை கண்ட நான் படம் எடுக்க முயன்றேன்” என்று ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleசீனாவை எச்சரித்த இந்திய அமைச்சர்! லடாக்கில் நீடிக்கும் பதற்றம்!
Next articleநீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here