பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!
மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை அதாவது மார்கழி 30 ஆம் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும்.
அதனை அடுத்து 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்,நான்கு மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஐந்து மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை ,ஏழு முப்பது மணிக்கு உச்சிக்கால அபிஷேகம்,8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆறு மணிக்கு ராக்கால அபிஷேகம் ,6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை நடைபெற இருக்கின்றது.இரவு 7.30 மணிக்கு ஏகாந்தம் ,இரவு எட்டு மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெறும் அதனை தொடர்ந்து திருக்காப்பிடுதல் நடக்கிறது.
மேலும் மாலை 5 மணிக்கு தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.இதனை தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும் ஜனவரி 6 ஆம் தேதி திருவாதிரை அன்று அதிகாலை 2 மணிக்கும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் அன்று அதிகாலை 1 மணிக்கும் நடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.