தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

0
161
Information released by Southern Railway! Travelers excited!
Information released by Southern Railway! Travelers excited!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப  புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி வருகிறது.

இந்த வசதியானது தமிழகம் ,கேரளாவிற்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களின் ஓரிரு டிரிசர்வ்டு பெட்டிகளை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது.விரைவு ரயில்களில் டி-ரிசர்வ்டு பெட்டி வசதி பல மாதங்களாக உள்ளது.தினமும் ரயிலில் பயணிப்போருக்கு இந்த வசதி மிக பயனளிக்கும்.அதிகபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணம் செய்யலாம்.இதற்காக சாதாரண கட்டணத்தை விட 20 முதல் 30 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்.

தற்போது சில ரயில்களில் இந்த வசதி விரிவுப்படுத்தி வருகின்றனர்.மேலும் பயணிகள் டி-ரிசர்வ்டு அல்லாமல் வழக்கமான முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.சென்னை எழும்பூர்-கேரள மாநிலம் ,கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ் 11,12 பெட்டிகளில் திருநெல்வேலி-கொல்லம் வரை இரு மார்க்கத்திலும் பயணம் செய்யலாம்.

எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே ,ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ் 12,13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலும் பயணம் செய்யலாம்.அதனை தொடர்ந்து தூத்துக்குடி-கர்நாடகா மாநிலம் ,மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில் ,தூத்துக்குடி முதல் மதுரை வரை எஸ் 4,10,11,13 பெட்டிகளில் பயணம் செய்யலாம்.கர்நாடகா மாநிலம் மங்களூரு-எழும்பூர் இடையே இயக்கப்படும் மங்களூரு விரைவு ரயிலில் திருச்சி முதல் மங்களூரு வரை எஸ் 7,8,9,10 பெட்டிகளிலும் மேலும் மங்களூரு எழும்பூர் இடையே இயக்கப்படும் எஸ் 10 பெட்டியில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இதனை அடுத்து கன்னியாகுமாரி கர்நாடகா மாநிலம் ,பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயிலில் கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ் 6,7 பெட்டிகளில் பயணம் செய்யலாம்.மேலும் சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் ரயிலில் எஸ் 11,12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரை சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.

author avatar
Parthipan K