சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

0
167

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

கேரட் நமக்கு பிடித்தமான காய்கறிகளில் ஒன்று. ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் சாப்பிட தோன்றும். கேரட்டை சாம்பார், பொரியல், அல்வா, ஜூஸ், என பலவிதங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கண்ணுக்கு நல்லது. ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கேரட்டினால் சில தீமைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கண்புரை நோய் வராமல் தடுத்து கண் பார்வையைத் தெளிவாக்கும். கேரட் ஜூஸை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைந்து உறுதியாகும். கேரட்டினால் மாலைக்கண் நோய் குணமாகும்.

தீமைகள்:
கேரட் ஜூஸினால் ஏராளமான நன்மைகள் உள்ளன அதனால் நாம் சாப்பிடுகிறோம். அதுவே சில சமயங்களில் நமக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. அதனால் இதை அளவோடு சாப்பிட வேண்டும்.

1. இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் கொடுப்பது நல்லதல்ல.

2. அலர்ஜி: சில பேருக்கு கேரட் ஒவ்வாமையை ஏற்படுத்தும். தோல் அலர்ஜி, படை,வீக்கம், வயிற்றுப்போக்கு. எனவே மேற்கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கேரட்டை சாப்பிடும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.

3. சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் கேரட் ஜூஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கேரட்டில் உள்ள சர்க்கரை குளுக்கோஸாக மாற்றப்பட்டு நேரடியாக ரத்தத்தில் கலப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். மேலும் சர்க்கரையின் அளவைக் குறிக்கும் கினைகமிக் குறியீடு கேரட்டில் 97 உள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை ஜூஸாக சாப்பிடாமல் அவித்து சாப்பிடுவது நல்லது.

4. கேரட்டில் ஏராளமான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் கேரட் ஜூஸை குடிப்பதால் பாலின் சுவையை முற்றிலும் மாற்றி விடுகிறது.

5. கேரட் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்றாக இருந்தாலும் சர்க்கரை நோய், குடல் பிரச்சனை, ஹார்மோன் பிரச்சனை, சர்க்கரை குறைவு பாதிப்பு போன்றவற்றில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவதால் மருத்துவரின் ஆலோசனையின் படி கேரட்டை சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

6. மேலும் கேரட்டில் 26 வகையான பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8 வகை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகவும், 16 ஹார்மோன் செயல்பாட்டை தடுக்க கூடியதாகவும், 3 நரம்பு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் 7 வளர்ச்சி பிரச்சினையை தருவதாகவும் உள்ளதால் மருத்துவ ஆலோசனைப்படி கேரட்டை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

கேரட்டை சாப்பிட்டுக் கொண்டே இருந்து விட்டு திடீரென நிறுத்தக்கூடாது. இதனால் தூக்கமின்மை, புளித்த ஏப்பம், மன எரிச்சல், பதற்றம் ஆகியன ஏற்படலாம்.

Previous articleஒரு டீஸ்பூன் சோம்பு போதும்! உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!
Next articleஅல்சர் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!