அல்சர் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

0
132

அல்சர் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

அன்றாடம் வாழ்வில் சாப்பிடும் உணவுகள்முறைகள் பலவிதமாக மாறிவிட்டது. இதன் விளைவாக அல்சர் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பதை இந்த பதிவு மூலம் காணலாம்.

தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட வேண்டிய நேரம் ஆகியவை மிகவும் மாறிவிட்டது. இதன் விளைவாக நம் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று அல்சர். நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குடல் பகுதிக்கு சென்றவுடன் ஹைட்ரோ குளோரிக் என்னும் அமிலம் மற்றும் பெப்சின் ஆகிய திரவம் சுரக்கின்றது. இதனால உணவுகள் செரிக்கப்படுகிறது.

காலை நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் மூலமாக இந்த சுரப்பிகள் அதிகம் சுரந்து அல்சர் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. புளிப்பு உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது அல்லது பொருள்களை எடுத்துக் கொள்வது அல்சர் பிரச்சனை ஏற்படுகின்றது. மது, புகைபிடித்தல் காரணமாக உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, மசாலா அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது இவை அனைத்தும் அல்சர் வருவதற்கு முக்கிய காரணமாகும்.

அல்சரை சரிசெய்ய மாதுளம் பழம் தோளினை வெயிலில் காய வைத்து அதனை பொடி செய்து ஒரு டம்ளார் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக அல்சர் குணமடையும். வயிற்றுப்புண் நீங்க பீட்ரூட் அதனை ஜூஸ் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுவதன் மூலமாக வயிற்றுப்புண் அல்சர் குணமடையும்.

தேங்காய் பால் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக அல்சர் குணமடையும். அகத்திக் கீரையை தினமும் நாம் சாப்பிடும் உணவுகளுடன் எடுத்துக் கொள்வதன் மூலமாக அல்சர் குணமடையும். நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகளுடன் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக இதுபோன்ற பிரச்சனை நீங்கும். நெல்லிக்காய் சாறு மற்றும் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலமாக இந்த பிரச்சனைகள் முழுமையாக நீங்கும்.

author avatar
Parthipan K