மருத்துவர்களின் கவனத்திற்கு! அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இதனை பயன்படுத்த தடை!

0
157
Attention doctors! Do not use it during surgery!
Attention doctors! Do not use it during surgery!

மருத்துவர்களின் கவனத்திற்கு! அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இதனை பயன்படுத்த தடை!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது.அந்த கருத்தரங்கில் அறுவைசிகிச்சை செய்தல் பற்றி பேசப்பட்டது.அப்போது மருத்துவர்களுக்கு புதிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அப்போது கடந்த வாரம் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பிற்கு காரணம் தவறான அறுவைசிகிச்சை தான் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தது.

அதனையடுத்து அறுவைசிகிச்சை செய்யும் பொழுது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான்.ஆனால் மருத்துவர்கள் சற்று கவனமாக இருந்தால் அதிக அளவு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்கலாம்.

அதற்கு முதலில் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் பொழுது கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அப்போது கைபேசிக்கு அவசியம் இருக்கும் பட்சத்தில் ஒரு உதவியாளர் மூலமாகத்தான் கையாள வேண்டும்.

அதன்பிறகு அறுவை சிகிச்சை அரங்குக்குள் தேவையற்ற சச்சரவுகள் செய்தல் ,வேறு மருத்துவப் பணிக்கு முன்னுரிமை வழங்குதல் ,போதிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பவை போன்ற செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

மேலும் பொதுவாக 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகளில் சராசரியாக 4.5 அறுவை சிகிச்சைகளில் தவறுகள் நிகழ்கின்றது என தரவுகள் கூறுகின்றது.அதனால் அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Previous articleமின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!
Next articleகுக்கர் கொண்டு வெடிப்பு! மரணத்தின் விளிம்பில் குற்றவாளி! வாக்குமூலம் வாங்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்!