நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு!

0
201
Attention NEET passers! The results of their consultation are published today!
Attention NEET passers! The results of their consultation are published today!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067எம்பிபிஎஸ் ,1380பிடிஎஸ் இடங்கள் உள்ளன.மேலும் பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையவழியில் கடந்த 19ஆம் தேதி  தொடங்கியது.

அதனைதொடர்ந்து அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள்,முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ,விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.அந்த கலந்தாய்வில் மொத்தம் 65இடங்கள் நிரம்பியுள்ளது.அதனையடுத்து அதற்கு அடுத்தநாள் 20ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் 7.5சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரம்பியது.

மேலும் பொதுக் கலந்தாய்வு  முடிவுகள் இணையவழியில் கடந்த 27ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்நிலையில்  இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல்  ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்.ர்ஸ்.ண்ய்  என்ற இணையதளத்தில் இன்று வெளியாகவுள்ளது.மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட பட்டியல் வரும் 30 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Previous articleதீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?
Next articleஇந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!