இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

0
71

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.

அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

அதோடு தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தனர்.

இதனை எதிர்க்கட்சிகள் மிக கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதோடு காவல்துறையினருக்கும் எந்த விதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீழ்ச்சி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றனர். தமிழகத்தில் இதுவரையில் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும் கூட வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்காமல் இருந்து வந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலை தூக்கி உள்ளது என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இவை அனைத்திற்கும் மேலாக சமீபத்தில் கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

அதோடு அந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நபர் என்ற விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

தமிழகத்தில் இப்படி அனுதினமும் பல்வேறு சட்டவிரோத சம்பவங்களும் கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர் கட்டுவதை காட்டும் விதமாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் இந்தியாவிலேயே அமைதியான மாநிலமாக திகழ்வதாக உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் சூரஜ்கன்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் தன்னுடைய உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே அமைதியான மாநிலமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதியான சூழ்நிலையை பேணிக்காத்து வருவதுடன் மாநிலத்தில் இருக்கின்ற மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் வாழும் சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறது என்று பேசி இருக்கிறார் அமைச்சர் ரகுபதி.

காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பங்களித்து வருகின்றன. கடந்த 10 வருடங்களில் மத்திய அரசு 593.83 கோடியும், மாநில அரசு சார்பாக 356.70 கோடியும் ஒதுக்கினர் அந்த விதத்தில் ஒதுக்கப்பட்ட 950.53 கோடியில் தமிழக அரசு இதுவரையில் 716.98 கோடியை செலவு செய்துள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு தேசிய சராசரியான 78.7 சதவீதத்தை விட 15 சதவீதம் அதிகமாக பெற்று 93.5% ஆக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படை நம்முடைய மீனவர்களை இலங்கை கடற் பகுதிக்குள் செல்ல நிர்பந்தித்து அவர்களை கைது செய்கிறார்கள். இது போன்ற கைது சம்பவங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.