பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை!
தற்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த பலர் அவர்கள் இருக்கும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு பிழைப்பைத் தேடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு வேலையை பார்த்துவிட்டு பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அவ்வாறு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான் ஜனதா குமார். இவரது மனைவி நிக்கி தேவி. இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு பியூஷ் குமார் மற்றும் ராஜகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜனதா தனது மனைவியுடன் தற்பொழுது ஈரோட்டில் வசித்து வருகிறார். இருவரும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள். சிறுவர்கள் இருவரையும் வீட்டிலேயே விட்டு விட்டு செல்வது வழக்கம்.
இந்த இரு சிறுவர்களும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம்போல் இந்த இரு சிறுவர்களையும் விட்டுவிட்டு ஜனதா குமார் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். வேறு சிறுவர்களும் அங்குள்ள மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாண்டு வந்துள்ளனர். ஆனால் அந்த ஊஞ்சலில் சிறுவனுக்கு பாசக்கயிறாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் அங்குள்ள வேப்ப மரத்தில் பிளாஸ்டிக் கயிறு கொண்டு ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ராஜகுமார் ஊஞ்சலில் இருந்து குதிக்க நினைத்துள்ளார். அவரு குதிக்க நினைக்கையில் ஊஞ்சலின் பிளாஸ்டிக் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றிக் கொண்டது.
சுற்றிக்கொண்டு கழுத்தை நெருங்கியதால் சிறுவன் உடனே மயங்கி கீழே விழுந்துள்ளான். பின்னர் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனைத் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் ஐஆர்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். பின்பு இந்த சம்பவம் குறித்து சென்னிமலையில் உள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு போலீசார் அங்கு வந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஊஞ்சலில் சிறுவனுக்கு மரணத்தை தேடித்தந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.