பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை!
அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு என்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாயிடு தேர்வுகளுக்கு மட்டுமே அதிக அளவில் தயாராகி பங்கு பெற்று வருகின்றனர். தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பாண்டில் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தது.
இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்வில் ஐம்பது விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50% அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் விளக்கம் தெரிவித்தனர்.
மேலும் அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்வில் மாணவர்கள் தங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மாணவர்களின் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இம்மாதம் 22 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் தொகை ரூபாய் 50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.