பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

0
374
Attention school students! Announcement issued by the Principal Education Officer!
Attention school students! Announcement issued by the Principal Education Officer!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அதைதொடர்பாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை மாதம் 6,13,14, 15ஆம் தேதிகளிலும், ஆகஸ்ட் மாதம் 3,4,5,8 ஆம் தேதி ஆகிய 8 நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் மாணவா்களுக்கு நடத்தப்பட வேண்டிய பாடத் திட்டம் பெருமளவு முடிக்கப்படாமல் உள்ளதால், இதை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன் அறிவித்துள்ளார். இதையடுத்து  செப்டம்பா் 3, 17, 24 ஆம் தேதிகளிலும், அக்டோபா் 15, 29 ஆம் தேதிகளிலும், நவம்பா் 5, 26 மற்றும் டிசம்பா் மாதம் 17 ஆம் தேதி ஆகிய 8 நாள்கள் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக  அறிவித்துள்ளது.

Previous articleஎமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
Next articleஇனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?