மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் பள்ளி மாணவர்கள் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்கு பிறகு தான் பெறமுடியம். ஆனால் இப்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு விணப்பித்து 2 நாட்களுக்குள் கிடைக்கும் படியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
அதேபோல் பட்டா வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக எம்எல்ஏக்கள், புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே ஒரு மனிதன் 30 ஆண்டு ஒரே இடத்தில் இருந்தால் பட்டா செய்து தருமாறு கோரிக்கை மனு கொடுக்கும் போது, சட்டரீதியாக எப்படி நிவர்த்தி செய்து கொடுப்பது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதனை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.இந்த கூட்டம்மானது மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது என கூறினார்.