ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

0
203

ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தம்டவுனில் நேற்று இரவு 10.30 மணியளவில் தொடங்கியது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.

விராட்கோலி பும்ரா, ரவீந்தர் ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளிட்டோர் 2வது போட்டியில் களமிறங்கவிருக்கிறார்கள். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பாண்ட்யா அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழந்து 198 ரன்கள் சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பேட்டிங்கில் கலக்கிய ஹர்திக் பவுலிங்கிலும் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Previous articleமாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here