10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அவர்களுக்கென கொடுக்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம். சமீபத்தில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் பாடத்தேர்வு எழுதலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

Leave a Comment