மாணவர்களின் கவனத்திற்கு! இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்!
கடந்த அரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.அதனை தொடர்ந்து கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம்,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் கல்லூரிகளில் கடந்த 9,10 ஆம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் புயலின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.அந்த தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி நடக்க இருந்த பருவத தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.இந்த தேர்வு தேதிகள் இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.அந்த வகையில் டிசம்பர் 24 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியும்,டிசம்பர் 31 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.