ஆசிரியர்களின் கவனத்திற்கு! பணி நியமனம் தேதி வெளியானது!
தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
மாத மதிப்பூதியம் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.
அந்தந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பாடத்திற்கு தகுதியான நபர்களை மட்டுமே குழுவின் மூலம் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வு செய்து நிரப்பிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அதற்கான சுற்றறிக்கை அனுப்பி ஜூலை 6ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.
மேலும் மாதம் ஆறாம் தேதி வரையில் அனைவரும் விண்ணப்பித்த நிலையில் தற்போது இது தொடர்பாக அரசுசெய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் , TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும். தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி,முதுநிலை பணியிடங்களை நிரப்புவது தொடர்பான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் முன்னதாக வெளியிட்டார். அந்த வழிகாட்டுதலின்படி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.