தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! 

Photo of author

By Rupa

தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்!
மத்திய அரசின் மானியம் பெறும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள்,
மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச்சட்டத்தின் கீழ்
பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி (ம) இல்லங்களை நெறிபடுத்தப்படும் சட்டம் 2014 மற்றும் விதி 2015 Tamilnadu hostels and Homes for women and Children (Regulation) Act 2014 and rules 2015-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதியின் நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து அக்கருத்துருவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.07.2022-க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுதியினை மூடுவதற்கு உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04546 254368 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தேனி
மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.