நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

Photo of author

By Sakthi

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

Sakthi

Updated on:

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டால்க்!

பிரபல நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது அவசியமான ஒன்று என்று ஓபனாக பதில் கூறியுள்ளார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பது மட்டுமில்லாமல் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா பாட்டின் தமிழ் வெர்ஷனை நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்தானா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் என்று ஓபனாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பேட்டியில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் “நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியாமா அவசியமா என்று கேட்டால் அவசியம் தான். கவர்ச்சி காட்டாமல் நடிக்கும் நடிகைகளை குற்றம் சொல்ல முடியாது. கவர்ச்சி காட்டாமல் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவாகத் தான் இருக்கும்.

ஏன் கவர்ச்சி அவசியம் என்றால் சில திரைப்படங்களில் கதைகளுக்கு கவர்ச்சி தேவையாக இருக்கும். அந்த சமயம் கவர்ச்சி காட்ட வேண்டும். கவர்ச்சி தேவையான கதையில் கவர்ச்சி காட்டாமல் நடித்தால் அதில் நடிக்கும் நடிகைகளின் முகம் பார்ப்பவர்களின் கண்களுக்கு தெரியாமல் போகக்கூடும்.

ஒரு பெண் அழகாக இருந்தால் பார்ப்பதோடு இல்லாமல் கொண்டாட வேண்டும். இதுல என்ன தப்பு இருக்கின்றது என்று தெரியவில்லை” என்று கவர்ச்சி குறித்து நடிகை ஆண்ட்ரியா அவர்கள் கூறியுள்ளார்.