துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

0
214

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கொடுக்கப்பட்ட துண்டு சீட்டால் ராதாரவி உச்சகட்ட கோபமடைந்தார்.

சென்னை வடபழனியில் நடந்த “ராஜவம்சம்” பட இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். இந்தி மொழி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யாராயுடன் இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறினார்.

நீண்ட ராதாரவி பேசிக்கொண்டே இருந்ததால் கடுப்பான படக்குழுவினர் விரைவில் பேச்சை முடிக்கும் படி ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தனர். அதைப்பார்த்தவுடன் கொதிப்படைந்த ராதாரவி என்னை சீக்கிரம் முடிக்க சொன்னால் ‘கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று கோபமாக கூறினார். இதனையடுத்து விழா மேடை கப்சிப் ஆனது.

பாஜகவிற்கு ஆதரவாக இந்தியை ஆதரித்து பேசியதால் படக்குழுவினர் டென்சன் ஆனார்களா? அல்லது சுய சினிமா புராணத்தை நீண்ட நேரத்தை பேசியதால் படக்குழு துண்டு சீட்டு கொடுத்தார்களா என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழுகிறது. மேலும் ஒரு மூத்த நடிகர் இப்படி பேசலாமா என்று சிலர் முணுமுணுத்தனர்.

Previous articleகர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!
Next articleகள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???