கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

0
228

கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் செங்கானூரணி அருகே உள்ள புல்லநேரி கிராமத்தில் வைரமுருகன் என்பவர் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். இவருக்கு செளமியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்து கடந்த ஜனவரி மாதம் செளமியாவிற்கு இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், 2 -வதும் பெண் குழந்தை பிறந்துவிட்டதால் வைரமுருகனுக்கும் செளமியாவிற்கும் இடையே வெறுப்போடும், மன நிம்மதி இல்லாமலும் இருந்தனர்.

இதனையடுத்து, விரக்தியில் இருந்த வைரமுருகன் தனது மனைவியின் ஆதரவோடு இரண்டாவது பெண் குழந்தையை கொல்ல முடிவு செய்தார். கடந்த மார்ச் 2 ஆம் தேதி குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக கூறி தனது வீட்டின் அருகே புதைத்துவிட்டனர். சொந்தபந்தம் மற்றும் ஊர் மக்களுக்கு தெரியாமல் இந்த கொலை நடந்ததுள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினருக்கு வைரமுருகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மீனாட்சிபட்டி விஏஓ மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் வைரமுருகன் வீட்டு அருகே புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பச்சிளம் குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக வைரமுருகன் அவரது மனைவி செளமியா மற்றும் குழந்தைக்கு தாத்தாவான சிங்கத்தேவர் என்பவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதுண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?
Next articleகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புமா சென்னை? பீதியை கிளப்பும் ஹாங்காங் பயணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here