ஒரு வார காலமாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

Photo of author

By Sakthi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவற்றை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன

இந்த சூழ்நிலையில், சென்னையில் ஆறாவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 20 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 52 காசுக்கும், விற்பனையாகி வருகின்றது