தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

0
79

தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். அந்தவகையில், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சார்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில் தடுப்பூசிகளை 18 வயதுக்கும் கீழே இருப்பவர்களுக்கு செலுத்துவது குறித்து இதுவரையில் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செல்வதன் காரணமாக, நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

சுழற்சியின் முறையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பாடம் கற்றால் ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையிடையே கற்றலில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததோடு, ஆசிரியர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். எல்லா மாணவர்களுக்கும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் இணையதளம் மூலமாக வகுப்புகளை கவனிக்க விருப்பம் கொள்ளும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அப்துல் வகாப்.

இணையதளம் மூலமாக மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் விதத்தில் வழிகாட்டுதலை வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.