ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கோவில் தான் பணிமய மாதா கோவில்.
இங்கு ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள்.
இந்த திருவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே, அன்றைக்கு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்று எந்த ஒரு அரசு அலுவலகங்களும் செயல்படாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அந்த மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் அலைமோதும் என்பதனால் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கிறார்.
மேலும் இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட இருக்கிறது.