கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடத்த வில்லை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் நேற்று தான் நடந்து முடிந்தது. மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இருபது ஓவர் தொடரை 2 – 1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே முதல் இரண்டு பந்தில் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் தொடக்க வீரரான பேரிஸ்டோ சதத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 302 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடி அபாரமாக விளையாடி 212 ரன்கள் குவித்தது. பின்னர் மீதம் இரண்டு பந்து இருந்த நிலையில் 7 விக்கெட் இழந்து 305 ரன்கள் எடுத்தது இந்த வெற்றியின் மூலம் 2 -1 என ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. மேக்ஸ்வெல் 108 ரன்களும் அலெக்ஸ் கேரி 106 ரன்களும் குவித்தனர்.