சானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்

Photo of author

By Parthipan K

சானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்

Parthipan K

கொரோனா வைரஸ் காரணமாக எந்த வித போட்டியும் மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை ஷைனிங் செய்வதற்காக எச்சில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்து ஷைனிங் தன்மையை உடனேயே இழந்து விடுவதால் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் – மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போது சசக்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் மிட்ச் கிளேடன் பந்தில் சானிடைசரை தடவியதாக தெரிகிறது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் சசக்ஸ் அணி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த போட்டியில் மிட்ச் கிளேடன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.