டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

manoj

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை. தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட … Read more

டிராகன் ஹீரோ நடிக்கும் புதிய படம்!.. இயக்குனர் யார் தெரியுமா?…

pradeep

துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஒரு கதையை எழுதி பல நடிகர்களிடம் சொல்லி ஒன்றும் நடக்காமல் கடைசியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கோமாளி. அது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரதீப்புக்கு … Read more

இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…

hussaini

80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார். ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..

chain theft

சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை … Read more

பிளஸ் டூ மாணவியை ஓட விட்ட ஓட்டுனர்!.. போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!..

bus

தமிழகத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் சிறிய நகரத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஏனெனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பயணத்தை கொடுக்கிறது. ஆனால், பேருந்து ஓட்டுனர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இலவச பயணம் என்பதால் நடத்துனர்களும் அவர்களை பேருந்தில் ஏற்ற ஆர்வம் காட்டுவது … Read more

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்!.. பொதுமக்கள் அச்சம்!..

chain

பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொடும் என்கிறார்கள். எனவே, சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை … Read more

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகைக்கு தொடர்பா?!.. குவியும் புகார்கள்!…

armstrong

திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சுமார் 3 மணி … Read more