துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://twitter.com/drashwathcn/status/1307251065658552320?s=20 … Read more

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக கட்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த தலைமை பதவியில் அமைச்சர்  ஜெயக்குமார் அவர்கள் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் பொதுமக்களின் நலன்கள் பற்றியும் ஏற்கனவே செயலில் இருக்கும் திட்டங்களின் முன்னேற்றங்கள்  உள்பட பல செய்திகள்  ஆலோசிக்கப்பட்டு உள்ளது.  அமைச்சர் D.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், அவரிடம் நிர்வாகி முனுசாமிக்கும், அமைச்சர் சண்முகத்திற்கும் இடையில் நடந்த விவாதம் பற்றிக் கேட்ட … Read more

மோடியின் புகழாரம்! மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்?

மோடியின் புகழாரம்! மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்?

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஏனெனில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சீர்திருத்த மசோதா  திட்டத்தை எதிர்த்து அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதமர் மோடி விவசாய சீர்திருத்த மசோதா திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது விவசாய மசோதாக்கள் விவசாயம் செய்யும் மக்களுக்கு பயனளிக்காத ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளான பாரதிய கிசான் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் இந்த விவசாய மசோதாக்கள் பெரும்பாலும் … Read more

எர்ணாகுளத்தில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது! அல்கொய்தா அமைப்புடன் தொடர்பா?

எர்ணாகுளத்தில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது! அல்கொய்தா அமைப்புடன் தொடர்பா?

என்.ஐ.ஏ. பிரிவினரால் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும்,  தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், எர்ணாகுளம் என்னும் ஊரில் தீவிரவாத கும்பலை சேர்ந்த மூன்று பேர் என்.ஐ.ஏ. பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து  வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  இந்த மூன்று நபர்களுக்கும் தொடர்புடைய ஆறு நபர்களை மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அல்-கொய்தா … Read more

69 ஆயிரம் தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரும் பா.ம.க!

69 ஆயிரம் தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரும் பா.ம.க!

வந்தே பாரத திட்டத்தின் கீழ் அதிக அளவு வளைகுடா நாடுகளில் சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழர்கள் தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று ராமதாசு கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்த வெளிநாடுவாழ் தமிழர்களின் பாதி பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் இன்னும் 68 ஆயிரம் பேர் … Read more

தமிழக அரசின் புதிய திட்டம்! நடமாடும் ரேஷன் கடைகள்!

தமிழக அரசின் புதிய திட்டம்! நடமாடும் ரேஷன் கடைகள்!

தற்போது தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் “அம்மா நகரும் ரேஷன் கடைகள்” எனும் புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 21  தேதி முதல்  நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ரேஷன் பொருள்களை தங்களின் வீட்டு அருகிலே பெற்றுக்கொள்ளலாம். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் இந்தத் திட்டத்தின் பயன்கள் குறித்து கூறியதாவது இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வாழும் மக்கள் மட்டுமில்லாமல் கிராமத்தில் வாழும் மக்களுக்கும் இத்திட்டம் மிகவும் … Read more

விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! சென்னை விமான நிலையம்!

விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! சென்னை விமான நிலையம்!

உள்நாட்டு விமான பயணிகளுக்கான தமிழ்நாடு இ-பாஸ் (TN e-Pass) பெறும் வசதி இன்று மாலை 6 மணியுடன் திரும்பப் பெறப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வவையில் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்றும் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்பது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி இ-பாஸ் முறையை ரத்து செய்வதாகவும் பிற மாநிலங்களில் … Read more

காட்டுமன்னார்குடி கோவில் பகுதியில் வெடி விபத்தை தொடர்ந்த இன்று விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து !!

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பட்டாசு உற்பத்தி தொழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளி நெருங்குவதால் தொழிற்சாலைகளும் அதிக அளவில் வெடி பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதனால் அதிக அதிக வெடிவிபத்து ஏற்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஒன்றான கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை திடீரென விபத்து வெடி விபத்து … Read more

இந்த ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையாரை தரிசிக்க முடியும்!! கோவில் நிர்வாகம்!

இந்த ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையாரை தரிசிக்க முடியும்!! கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 95880 பேர் குணம்: 1247 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 95880 பேர் குணம்: 1247 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,08,015 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 85,619 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95,880 … Read more